விசாகப்பட்டிணத்தில் நடந்தது என்ன??? விரிவான தொகுப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று, ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக்கசிவால் ஒரு சிறுமி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் 1984 இல் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலை நினைவுப்படுத்தியதாகப் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் அந்தத் தொழிற்சாலையில் என்ன நடந்தது என்பதைக் குறித்து அங்கு 12 வருடமாக வேலைப்பார்த்து வந்த உதவி மேலாளர் ஒருவர் விவரித்துள்ளார்.
விசாகப்பட்டினம் நகரத்தைச் சார்ந்த ரசாயன பொறியாளர் அனந்திரம் கணபதி யுஜி குழுமத்திற்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலை எல்ஜி குழுமத்தால் வாங்கப்பட்ட போதிலிருந்து அங்கு பணியாற்றி வருகிறார். 1961 இந்துஸ்தான் பாலிமர் குழுமத்தால் தொடங்கப் பட்டதுதான் இந்த கெமிக்கல் தொழிற்சாலை. பின்னர் 1978 இல் யுஜி குழுமத்தால் வாங்கப்பட்டது. யுஜி குழுமத்தின்க்கீழ் இந்தத் தொழிற்சாலை இயக்கப்பட்ட போது அனந்திரம் கணபதி உதவி மேலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் 1997 இல் தென் கொரியாவை சேர்ந்த தொழில் நிறுவனத்தால் இந்த தொழிற்சாலை வாங்கப்பட்டு எல்ஜி பாலிமர் என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்டது. எல்.ஜி பாலிமர் தயாரிப்பு குழுவானது ஆலையில் பல மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழிற்சாலையில் தயாரிப்பு மற்றும் மூலப்பொருட்கள் என இருவேறுபட்ட பணிகளும் நடைபெற்றதாக அனந்தராம் கணபதி குறிப்பிடுகிறார்.
தற்போது எல்.ஜி பாலிமர் கெமிக்கல் தொழிற்சாலையில் நடந்தது விஷவாயு கசிவு அல்ல. அங்கு சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் ’‘ஸ்டைரீன்” 145 டிகிரி செல்சியஸ் கொதிநிலை கொண்ட ஒரு மோனோமர். இது ஒரு திரவ நறுமண ஹைட்ரோகார்பன். சுற்றுப்புற வெப்பநிலையை விட குளிர் தன்மையில் இந்த திவரம், இந்தத் தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். “ஸ்டைரீன் என்பது பாலிமரைஸ் செய்யாது, அதாவது ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறோடு சேர்ந்து இன்னொரு மூலக்கூறாக உற்பத்தியாகி எதிர்வினையாற்றும் தன்மை இந்த ஸ்டைரீனுக்குக் கிடையாது. காரணம் இந்த திரவத்தில் பாலிமரைஸ் ஆகாதபடிக்கு ஒரு தடுப்பானும் சேர்க்கப்பட்டு உள்ளது” என பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அந்தத் தொழிற்சாலையில் யூனிட் 12 இல் வேலைபார்க்கும் இவர் தொழிற்சாலை ஊரடங்கு உத்தரவினால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. வெளியே இருக்கும் வெப்ப நிலையைவிட இந்த “ஸ்டைரீன்” குளிர்ந்த பதத்தில் பராமரிக்கப்படாமல் அது காற்றில் அதிக வெப்பமாகி நீராவி கசிவினை வெளிப்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
போபாலில் நடைபெற்ற விஷவாயுத் தாக்குதலால் 5 ஆயிரம் பேர் ஒரே இரவில் மூச்சுத் திணறி இறந்தனர். இந்தக் கோர விபத்தின் சுவடுகள் இன்றைக்கு வரைக்கும் சரிசெய்யப் படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக இங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடனே பிறக்கும் அவலம் தொடர்ந்து நடைபெறும் நிலையில் விசாகப்பட்டினத்தில் விசவாயு கசிந்திருப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அமெரிக்க நிர்வாகி வான் ஆண்டர்சன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கடைசி வரை அவர் வழக்கில் கூட கலந்து கொள்ளாமல் பாதுகாக்கப் பட்டார். இந்நிலையில் எல்.ஜி பாலிமர் குழுமத்தின் கெமிக்கல் நிறுவனத்தில் “ஸ்டைரீன்” வெளியாகி 300 க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
ஆந்திர மாநில அரசு இந்த இச்சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த வாயுத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எல்.ஜி குழுமத்தின் மீது விசாரணை நடத்தபடும் என அம்மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு தளத்தப்பட்டவுடன் தொழிற்சாலைகளை இயக்கலாம் என்ற அறிவிப்பினால் எல்.ஜி பாலிமர் நிறுவனத்தை திறந்திருக்கிறார்கள். தொழிற்சாலை மூடப்பட்டபோது முறையான பராமரிப்பினை மேற்கொள்ளாமல் இருந்ததுதான் இந்த விபத்துக்காரணம் எனவும் இந்தப் பாதிப்பை குறைக்க வேறு ரசாயனங்களை பயன்படுத்தி வருகிறோம் எனவும் அம்மாநில தொழில்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments