மேட்ச் டிரா ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டனில் கடந்த ஜுன் 18 ஆம் தேதி துவங்க வேண்டிய உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி மழை காரணமாக முதல் நாளே கைவிடப்பட்டது. அடுத்து 19 ஆம் நாள் போட்டித் துவங்கினாலும் வெறும் 40 ஓவர்களைக் கடந்த நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்திக் கொள்ளப்பட்டது. அடுத்த நாளான நேற்று 30 நிமிடத்திற்கு முன்னதாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி 3 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி இன்னும் மழை காரணமாக துவங்காமல் இருக்கிறது.
இதனால் உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டியின் ரிசல்ட் என்னவாகும் என்ற பெருத்த சந்தேகத்தை இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். மேலும் முதல்நாள் போட்டியை ஈடுகட்டும் வகையில் ரிசர்வ் டே கொடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்து இருக்கிறது. ஆனால் ரிசர்வ் டே குறித்த முடிவை இந்தப் போட்டியின் referee அறிவிக்க வேண்டும் என்பதுதான் விதி. அந்த அடிப்படையில் 5 நாள் போட்டி முடிந்தப் பின்பு ஒருவேளை போட்டிக்கான முடிவு தெரியாதபோதுதான் referee கிறிஸ் பிராட், ரிசர்வ் டே பற்றி சிந்திப்பார்.
இதனால் தற்போதைய நிலைமையைப் பொறுத்த அளவில் ரிசர்வ் டே இருக்குமா என்பதும் சந்தேகம். அப்படி ரிசர்வ் டே ஆடிய பின்பும் ஒருவேளை மேட்ச் டிராவில் முடிந்தால்? அல்லது முடிவு தெரியாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிய டெஸ்ட் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் படி நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். இதனால் இறுதிப் போட்டியில் தற்போது மோதி வருகின்றனர். அந்த அடிப்படையில் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களையும் கேப்டன் கோலி 44 ரன்களையும் எடுத்துள்ளார்.
நியூசிலாந்து தரப்பில் கேல் ஜேமிசன் 22 ஓவர்களுக்கு 31 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருக்கிறார். அதையடுத்து களம் இறங்கி இருக்கும் நியூசிலாந்து வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை குவித்துள்ளது. இதனால் நியூசிலாந்தின் கை ஓங்கியே இருக்கிறது. இந்நிலையில் போட்டி டிராவில் முடிந்தால் என்ன ஆகும்? ஒருவேளை முடிவு தெரியாமல் போனால் என்னவாகும் என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஐசிசி அறிவித்துள்ள விதிகளின்படி மேட்ச் டிரா ஆனால் இரு அணிகளும் சாம்பியன்ஸ்களாக அறிவிக்கப்படுவார்கள். கோப்பை இருவருக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். ஒருவேளை முடிவு தெரியாமல் போகும்போது என்ன முடிவெடுப்பார்கள் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் மேட்ச் டிரா ஆவதை விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments