ஜூலிக்கு என்ன ஆச்சு டிராமாவா? சீரியஸா?
- IndiaGlitz, [Thursday,July 20 2017]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பெரிதான சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில் இறுதியில் திடீரென ஜூலி வயிற்றை பிடித்து கொண்டு கதறி அழுவதை போல் முடித்துள்ளனர்.
இதை நடிப்பு என்று காயத்ரி மட்டும் கூற மற்றவர்கள் பதறியடித்து ஜூலிக்கு என்ன ஆச்சு என்று பார்க்கின்றனர். பதட்டத்துடன் கேமிரா முன் பிக்பாஸிடம் உடனே மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி சக்தி கூறுகின்றார்.
ஜூலிக்கு உண்மையிலேயே ஏதாவது உடல்கோளாறா? அல்லது வழக்கம் போல் நடிப்பா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.
முன்னதாக விருந்தினர்கள் முன்னிலையில் ஜூலியை காயத்ரி மற்றும் நமீதா அவமானப்படுத்த, ஜூலி குனிந்த தலையுடன் செல்கிறார். இதனால் மனமுடைந்த ஜூலி அழுக, அவருக்கு ஓவியா ஆதரவாக குரல் கொடுக்கின்றார். இந்நிலையில் திடீரென ஓவியாவுக்கும் நமீதாவுக்கும் பிரச்சனை வருகிறது. இந்த புரமோ வீடியோக்களால் இன்றைய நிகழ்ச்சியை எதிர்பார்க்க வைத்துவிட்டனர் அந்த தனியார் தொலைக்காட்சியினர்.
— Vijay Television (@vijaytelevision) July 20, 2017