ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது....! சீமான் சரமாரி கேள்வி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர, ஸ்டாலினுக்கு வேறு தகுதியில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக-பாமக கூட்டணி, திமுக காங்கிரஸ் கூட்டணி, மநீம- சமத்துவ மக்கள் கட்சி, தினகரனின் அமமுக போன்ற கட்சிகள் கூட்டணியுடன் இத்தேர்தலில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில் சீமானின் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. 234 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் 117 சீட்டுக்களை மகளிர் வேட்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. கலாய் பேச்சு, பாட்டு பாடுவது, மக்களுடன் எதார்த்தமாக பேசுவது போன்ற பிரச்சார செயல்களால் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் சீமான். சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது என்றே சொல்லலாம்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில், நாதக சார்பாக ஸ்ரீதர் களமிறங்குகிறார். வேட்பாளரை ஆதரித்து, சீமான் இன்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"அதிமுக, திமுக கழகங்கள் ஆட்சியில் இருக்கும் வரை, தமிழகத்தில் நல்ல அரசியல் என ஒன்று பிறக்காது, பிறக்கவும் முடியாது என்று கூறினார். மேலும் பேசிய அவர் "கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதியை தவிர, ஸ்டாலினுக்கு வேறு தகுதிகளே கிடையாது. பார்த்துப்படிக்கும் போது, நூறு தவறுகள் செய்யும் தலைவர் தான் ஸ்டாலின். "போட்டுப் பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட" என்ற வசனத்தை கூறி, ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள், தமிழ்நாட்டை உலகில் தலைசிறந்த நாடாக மாற்றிக்காட்டுவேன். விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தீர்கள் என்றால், ஒரு புதிய தேசத்தை உருவாக்கலாம் என்றும் அவர் கூறினார். வில்லிவாக்கத்தில் நாதக சார்பாக களமிறங்கும் ஸ்ரீதர், சிறந்த செயல்பாட்டாளர், ஆகச்சிறந்த அறிஞர் என்றும் அவரைப் பற்றி புகழாரம் சூட்டினார். உங்கள் தொகுதியை சிறப்பாக மாற்ற,ஸ்ரீதருக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெறச் செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments