19வது ஓவரின்போது தல அப்படி என்ன தான் சொன்னார்?  சஹாரின் சகோதரி பதில்!

கடந்த சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுகு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 2 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. களத்தில் சர்ஃபாஸ்கான் மற்றும் மில்லர் ஆடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் 19வது ஓவரை தீபக் சஹார் பந்துவீசவந்தார். வழக்கமாக முதல் பத்து ஓவருக்குள் நான்கு ஓவரையும் முடித்துவிடும் சஹார், இந்த முறை பிராவோ காயம் காரணமாக 19வது ஓவரை வீச வந்ததால் கொஞ்சம் டென்ஷனுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் முதல் இரண்டு பந்துகளை தீபக் சஹார் நோபாலாக வீசியதும், அந்த இரண்டு பந்துகளுக்கு ஃப்ரி ஹிட் கொடுக்கப்பட்டதாலும் டென்ஷன் எகிறியது. இதனையடுத்து தீபக் சஹார் அருகே வந்த கூல் கேப்டன் தல தோனி, தீபக் சஹாருக்கு சில அறிவுரைகளை கூறினார். அதன்பின் அருமையாக பந்துவீசிய தீபக் சஹார், கடைசி பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த ஓவரால்தான் சிஎஸ்கே அணி வென்றது.

இந்த நிலையில் அந்த டென்ஷனான நேரத்தில் தீபக் சஹாரிடம் தல அப்படி என்னதான் சொல்லியிருப்பார் என்பதே பலரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் நேரில் பார்க்கும் தீபக் சஹாரின் சகோதரி மால்தி சஹாரிடம் இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு மால்தி சஹார், 'அதை என்கிட்ட கூட சொல்ல மாட்டேங்குறார். அது என்னன்னு தெரிஞ்சுக்காம என் தலையே வெடிச்சிரும்போல் இருக்குது' என்று பதிலளித்துள்ளார். அப்படி என்னதான் தல கூறியிருப்பார். உங்கள் கற்பனையை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

More News

திரும்ப திரும்ப ஆதரவு கேட்க முடியாது: ரஜினி ஆதரவு குறித்து கமல்

தனது கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பார் என நம்புவதாக கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ரஜினி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா? அதிகாரபூர்வ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தலைவர் 167' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது

8 வழிச்சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் தடை: தீர்ப்பை கேட்டு விவசாயிகள் ஆனந்தக்கண்ணீர்

சென்னையில் இருந்து சேலம் வரை ரூ.10ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது.

ஒரு ரூபாயில் சானிடரி நாப்கின், நதிகள் இணைப்பு, ராமர் கோவில்: பாஜக தேர்தல் அறிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில் சற்றுமுன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது

தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்

சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதால் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு 46 வருட சிறை தண்டனையும் மரண தண்டனை விதித்தது.