உலகம் அழியும் நாள் எது??? மாயன் கணிப்பு என்ன சொல்கிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அழிவைப் பற்றி மனிதர்களுக்கு எப்போதும் உள்ளூற ஒரு அலாதியான ஈடுபாடு இருக்கிறதோ? என்னவோ? அச்செய்திகளை மட்டும் நாம் தொடர்ந்து கவனிக்கவே செய்கிறோம். இந்தக் கருத்துக் கணிப்பில் உலக அளவில் மிகவும் பிரபலமானது மாயன் காலண்டர். 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனத்தவர்கள் உலகிலேயே பழமையான நாகரிகத்தைச் சார்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
அந்த நாகரிக மனிதனர்கள் சூரியன் மற்றும் சந்திரனை மையமாகக் கொண்டு பல காலண்டர்களை உருவாக்கி பயன்படுத்தி இருக்கின்றனர். அப்படி மொத்தம் 20 காலண்டர் முறைகளை அவர்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் பெரும்பலான காலண்டர்கள் 13 நாட்கள் மற்றும் 20 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். காரணம் 13 மற்றும் 20 என்ற இரண்டு எண்களையும் பெருக்கினால் 260 என்ற எண் கிடைக்கும். 260 என்பது ஒரு குழந்தை கருவில் வளருவதற்கு எடுத்துக் கொள்ளும் மொத்த நாட்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.
அவர்கள் பயன்படுத்திய அனைத்துக் காலண்டர்களிலும் 3 காலண்டர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் சோல்கின் என்ற காலண்டர். மதச் சடங்குகளைப் பற்றியும், மத விழாக்களை எப்போது நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும் பல்வேறு விஷயங்களை அவர்கள் அதில் பதிவு செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காலண்டரும் 13 நாட்கள் மற்றும் 20 பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு இருக்கிறது. தெய்வீகத் தன்மை கொண்ட இந்த காலண்டரை மாயன் இனத்தவர்கள் 5126 வருடங்கள் என்ற நீண்ட கால சுழற்சி வரைக்கும் கணித்து வைத்துள்ளனர். அவர்கள் கணித்த நீண்ட காலச் சுழற்சியும் ஒரு நாளில் முடியத்தானே செய்யும். அந்த நாளில் உலகம் உறுதியாக அழிந்து விடும் என்ற நம்பிக்கை நம்முடைய சில விஞ்ஞானிகள் முதற்கொண்டு பலரும் நம்பினர். அந்த நம்பிக்கையில் கூட பிரச்சனை இல்லை. தற்போது அந்த நாள் எது என்பதுதான் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
மாயன் காலண்டர் கடைசியாக முடிவுற்ற தேதி 21 டிசம்பர், 2012 என நாம் பயன்படுத்தும் கிரிகோரியன் நாட்காட்டி கூறுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியைத்தான் நாம் தற்போது பயன்படுத்தி வருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மாயன் சொன்ன உலகம் அழியும் நாள் 21 டிசம்பர், 2012 இல்லை, 21 ஜுன், 2020 இல் தான் வருகிறது என ஒரு விஞ்ஞானி கணித்து கூறியிருக்கிறார். அதெப்படி போன நாள் திரும்ப வரும் என்ற சந்தேகம் வரலாம். கிரிகோரியன் நாட்காட்டிக்கு முன்னால் நமது முன்னோர்கள் ஜுலியன் நாட்காட்டி என்ற ஒரு கணிப்பு முறையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். ஜுலியன் கணிப்புப்படி மாயன் சொன்ன நாள் வருகிற ஜுன் 21, 2020 வரப்போகிறது என்ற பரபரப்பை பலரும் ஒருவித அதிர்ச்சியுடன் எதிர்ப்பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.
மாயன் காலண்டர் தொடங்கும் நாள் கி.மு. 3114 ஆகஸ்ட் 11 இல். அந்த நாள் ஜுலியன் காலண்டரில் கி.மு 3114 செப்டம்பர் 6 ஆம் தேதி எனக் குறிப்பிடுகிறது. அப்படியென்றால் மாயன் காலண்டர் சொன்ன டிசம்பர் 21,2012 என்ற நாள் ஜுலியன் கணிப்புப்படி வருகிற 21 ஜுன், 2020 என ஆகிறது. கிரிகோரியன் கணிப்பு தவறாகி விட்டது. தற்போது நம்முடைய முன்னோர்கள் சொன்ன ஜுலியன் கணிப்பு ஒருவேளை உண்மையாகி விடுமோ என்ற பதட்டமும் பொது வெளியில் உருவாகி இருக்கிறது. ஒருவேளை இதுமட்டும் உண்மையாக இருந்தால் நமக்கு ஜுன் 22 என்ற ஒருநாள் இல்லாமல் போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com