தாய்மை தள்ளி போக காரணம் என்ன? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சிகரமான தகவல்.

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

பொதுவாகவே தமிழ்நாட்டில் முக்கியமாக நம் சமுதாயத்தில் ஒரு பெண் தாய்மை அடையவில்லை என்றால் சட்டென்று அவை, அந்த பெண்ணை தான் முதலில் பாதிக்கும்.தாய்மை அடையாத பெண்கள் கணவர் இல்லாமல் தனியாக மருத்துவரை அணுகுகிறார்கள்,

குறிப்பாக அந்த பெண் அந்த பெண்ணுடைய தாயார் இருவரும் தான் மருத்துவரை சென்று பார்த்து ,என் மகள் இன்னும் தாய்மை அடையவில்லை அவள் இப்படி இருப்பது அவளுடைய குடும்ப வாழ்க்கையை பாதிக்கின்றது என கூறுவது வேதனைக்குரியது.

ஏன் இந்த பிரச்சினை ஒரு ஆணை பாதிக்கவில்லை ?தாய்வழி சமுதாயத்தில் ஒரு பெண் தாய் ஆகாத நிலையை சுட்டிக்காட்டி இந்த சமுதாயம் ஏன் அவளை மட்டுமே காயப்படுத்துகிறது?ஒரு பெண் தாய் ஆகாமல் இருப்பதற்கு அந்த ஆணும் காரணமாக இருக்கலாம் அல்லவா ?

அறிவியல் ரீதியாக ஒரு பெண் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு அந்த பெண் 30% மட்டுமே காரணமாக இருக்கிறாள்.இதற்கு கர்பப்பை டுயுப் அல்லது ஹார்மோனல் மற்றும் pcos கூட காரணமாக இருக்கலாம்.

மீதி 30%ஆண் காரணமாக இருக்கிறார்.இறுதியாக 30% ஆண் பெண் இருவருமே காரணமாக இருக்கின்றனர்.கடைசியாக உள்ள 10% யாரும் எதிர்பாரத என்ன டெஸ்ட் எடுத்தாலும் காரணமே இல்லாத கர்ப்பத்தடை ஆகும்.

இது எல்லாவற்றிற்கும் முக்கிய மற்றும் முதல் மூல காரணம் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தாம்பத்யம் பற்றிய புரிதல் இல்லாததே ஆகும்.அதை சரி செய்ய தம்பதியர் இருவரும் சேர்ந்து மருத்துவரிடம் கவுன்செல்லிங் செல்ல வேண்டும்.

முதலில் அவர்களுக்குள் உள்ள அந்த பயம் தயக்கம் மற்றும் புரிதல் இன்மையை நீக்க வேண்டும்.பிறகு சரியான வாழ்க்கை முறை,ஆரோக்கியமான உணவு,மன நிலை மாற்றம்,இட மாற்றம் மேலும் தனிமை முக்கியம்.இறுதியாக ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்கள் வாழ்க்கையை துவங்குவது நல்லது என மருத்துவர்கள் ஆலோசிக்கின்றனர்.