தாய்மை தள்ளி போக காரணம் என்ன? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சிகரமான தகவல்.

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

பொதுவாகவே தமிழ்நாட்டில் முக்கியமாக நம் சமுதாயத்தில் ஒரு பெண் தாய்மை அடையவில்லை என்றால் சட்டென்று அவை, அந்த பெண்ணை தான் முதலில் பாதிக்கும்.தாய்மை அடையாத பெண்கள் கணவர் இல்லாமல் தனியாக மருத்துவரை அணுகுகிறார்கள்,

குறிப்பாக அந்த பெண் அந்த பெண்ணுடைய தாயார் இருவரும் தான் மருத்துவரை சென்று பார்த்து ,என் மகள் இன்னும் தாய்மை அடையவில்லை அவள் இப்படி இருப்பது அவளுடைய குடும்ப வாழ்க்கையை பாதிக்கின்றது என கூறுவது வேதனைக்குரியது.

ஏன் இந்த பிரச்சினை ஒரு ஆணை பாதிக்கவில்லை ?தாய்வழி சமுதாயத்தில் ஒரு பெண் தாய் ஆகாத நிலையை சுட்டிக்காட்டி இந்த சமுதாயம் ஏன் அவளை மட்டுமே காயப்படுத்துகிறது?ஒரு பெண் தாய் ஆகாமல் இருப்பதற்கு அந்த ஆணும் காரணமாக இருக்கலாம் அல்லவா ?

அறிவியல் ரீதியாக ஒரு பெண் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு அந்த பெண் 30% மட்டுமே காரணமாக இருக்கிறாள்.இதற்கு கர்பப்பை டுயுப் அல்லது ஹார்மோனல் மற்றும் pcos கூட காரணமாக இருக்கலாம்.

மீதி 30%ஆண் காரணமாக இருக்கிறார்.இறுதியாக 30% ஆண் பெண் இருவருமே காரணமாக இருக்கின்றனர்.கடைசியாக உள்ள 10% யாரும் எதிர்பாரத என்ன டெஸ்ட் எடுத்தாலும் காரணமே இல்லாத கர்ப்பத்தடை ஆகும்.

இது எல்லாவற்றிற்கும் முக்கிய மற்றும் முதல் மூல காரணம் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தாம்பத்யம் பற்றிய புரிதல் இல்லாததே ஆகும்.அதை சரி செய்ய தம்பதியர் இருவரும் சேர்ந்து மருத்துவரிடம் கவுன்செல்லிங் செல்ல வேண்டும்.

முதலில் அவர்களுக்குள் உள்ள அந்த பயம் தயக்கம் மற்றும் புரிதல் இன்மையை நீக்க வேண்டும்.பிறகு சரியான வாழ்க்கை முறை,ஆரோக்கியமான உணவு,மன நிலை மாற்றம்,இட மாற்றம் மேலும் தனிமை முக்கியம்.இறுதியாக ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்கள் வாழ்க்கையை துவங்குவது நல்லது என மருத்துவர்கள் ஆலோசிக்கின்றனர்.

More News

சூரி - சசிகுமாரின் 'கருடன்' கிளிம்ப்ஸ் வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

சூரி மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்த 'கருடன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர்கள்

'வேட்டையன்' படத்தின் மாஸ் தகவல்.. ரஜினியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் ரஜினி காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக

விஜய்யின் 'கோட்' படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சி எத்தனை நிமிடங்கள்? ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தோன்ற இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது காட்சி எத்தனை நிமிடங்கள் என்பது குறித்த

சித்ரா பவுர்ணமி சிறப்புகள்: ஆன்மீக பேச்சாளர் ஆண்டாள் அருள் தனலட்சுமியின் அற்புத விளக்கம்

சென்னை: ஆன்மீக பேச்சாளர் ஆண்டாள் அருள் தனலட்சுமி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சித்ரா பவுர்ணமியின் சிறப்புகள், விரத முறைகள், வழிபாடு செய்யும் விதம்,

'லியோ' வியாபாரத்தை முந்தியதா 'தக்லைஃப்'. முக்கிய பிசினஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை வியாபாரத்தை கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தின் வியாபாரம் முந்திவிட்டதாக இணையத்தில் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது.