முதலில் வந்தது கோழியா? முட்டையா? மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
- IndiaGlitz, [Saturday,June 17 2023]
நம்மூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் ஒரு முக்கிய கேள்வி, கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பதுதான்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொதுவாக முன்வைக்கும் இந்த பரிணாம வளர்ச்சிக் குறித்த கோள்விக்கு இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் கிடைக்காமல் இருந்துவந்த நிலையில் தற்போது விஞ்ஞானிகள் இதற்கான விடை கிடைத்து விட்டதாக அறிவித்து உள்ளனர்.
அதாவது முதலில் கோழி வந்திருக்குமா? அல்லது முட்டை வந்திருக்குமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தற்போது முட்டையிடும் அனைத்து உயிரினங்களும் ஆரம்பத்தில் நேரடியாகவே குஞ்சுகளையே பொறித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்காக 51 புதைபடிவ இனங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விஞ்ஞானிகள் அதில் 29 வகை உயரினங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது முடிவுகளை வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அனைத்து விளக்கங்களும் Nature Ecology and Evolution ஆய்விதழில் வெளியாகி இருக்கிறது.
சம காலத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டி இனங்களினுடைய மூதாதையர்கள் எல்லாம் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுவாக முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் உயிரினங்களை Oviparous என்றும் நேரடியாக குட்டிப்போட்டு பாலூட்டும் உயிரினங்களை Viviparous என்று விஞ்ஞானிகள் வகைப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் தற்காலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கக்கூடிய விலங்கு வகைகளின் பழைய புதைய வடிவங்களை (உ.தா பறவைகள், பல்லிகள்) ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டபோது அதில் இஇஆர் என்ற முறையே இனப்பெருக்கத்திற்கான முறையாக இருப்பது தெரியவந்துளளது.
அதாவது பறவைகள், பல்லிகள் போன்றவற்றின் பழைய புதைய வடிவங்களை ஆய்வு செய்து பார்த்தபோது அவை பெரும்பாலும் இஇஆர் எனப்படும் தாய் தனது கருவை அதிக காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும் முறையிலேயே இனப்பெருக்கம் செய்திருக்கிறது. இதனால் பழைய காலத்தில் வாழ்ந்த பறவைகள், பல்லிகள் போன்றவை முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சு பொறித்திருக்கும் என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
காரணம்- 4 கால்கள் மற்றும் முதுகெலும்புடன் கூடிய அம்மினியோட்ஸ் என்ற வகை உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பு அனைத்து உயிரினங்களும் நீரை சார்ந்தே தங்களது இனப்பெருக்கத்தை நடத்தயிருக்கிறது. உதாரணத்திற்கு தண்ணீரில் வாழும் தவளை.
இந்த அம்மினியோட்ஸ் வகை உயிரினங்கள் சுமார் 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றி இருக்கிறது. அதற்கு முன்னால் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அம்மினியோட்ஸ் போன்று இல்லாமல் நீரை சார்ந்து தங்களது இனப்பெருக்கத்தை நடத்தியிருக்கிறது.
ஆனால் அம்மினியோட்ஸ் என்ற பரிணாம வளர்ச்சி அடைந்த உயிரினங்கள் தோன்றிய பிறகு அதற்கு கடினமான தோல்கள் கிடைத்திருக்கிறது. இதனால் நீரை விட்டு வெளியே வாழும் சூழலுக்கு அவை பழகியிருக்கின்றன. இதனால் குளிர்ச்சி, வெப்பம் என்று சூழலுக்கு ஏற்றவாறு முட்டையோ அல்லது குட்டியோ போடும் இனப்பெருக்க மாற்ற முறை இத்தகைய உயிரினங்களில் நடைபெற்றிருக்கிறது.
மேலும் அம்மினியோட்ஸ் உயிரினங்களில் கருவை பாதுகாக்கின்ற ஓடு (கருவை) அம்சமும் கிடைத்திருக்கிறது. இதனால் தண்ணீரை விட்டு தங்களுக்கு ஏற்ற சூழலில் எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டு பறவைகள், பல்லிகள் போன்ற உயிரினங்கள் தங்களது இனப்பெருக்கத்தை செய்து வருகிறது.
அதாவது பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு இனப்பெருக்க முறையில் வளைந்து கொடுக்கும் தன்மை பறவை மற்றும் பல்லி போன்ற உயிரினங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதனால் அவை பெரும்பாலும் முட்டையிடுக்கின்றன.
அதிலும் தற்போது சில பல்லி, பாம்பு இனங்கள் நேரடியாக குட்டிகளை இடுகிறது. காரணம் அவை குளிர்ச்சி அல்லதும் வெப்பம் என்று தான் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு இனப்பெருக்க முறையைக்கு வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
இந்த மாற்றம் அனைத்தும் அம்மினியோட்ஸ் பரிணாம வளர்ச்சியினால் கிடைத்தது.
ஆனால் இந்த அம்மினியோட்ஸ் பரிணாம வளர்ச்சிக்கு முன்பு அனைத்து உயிரினங்களும் நீரை சார்ந்து, தங்களது கருவை நீண்ட காலத்தில் தேக்கி வைத்து குட்டிகளை பெற்றெடுத்ததாக தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த முடிவுகளைக் கொண்டு கோழியில் இருந்து முட்டை வந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.