ட்ரிம் செய்யப்பட்ட கார்த்தியின் 'மெய்யழகன்'.. நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன?
- IndiaGlitz, [Tuesday,October 01 2024]
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவான 'மெய்யழகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதால், நேற்று முதல் 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், தற்போது ட்ரிம் செய்யப்பட்ட காட்சிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கார்த்தி, அரவிந்த்சாமி உள்பட பலர் நடித்த 'மெய்யழகன்’ திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி, இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தினாலும், படத்தின் நீளம் மிகவும் அதிகம் என்று விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஆக இருந்த நிலையில், 18 நிமிடங்கள் நேற்று முதல் குறைக்கப்பட்டதாகவும், ட்ரிம் செய்யப்பட்ட பின், 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என ரன்னிங் டைமாக திரையிடப்படுகிறது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முதல் திரையரங்குகளில் 'மெய்யழகன்’ திரைப்படத்தில் உள்ள 'ஜல்லிக்கட்டு காளை ஊர்வலம் காட்சிகள், ஜல்லிக்கட்டு காளை காவல் நிலையம் காட்சிகள், சோழன் ஈழம் மற்றும் ஸ்டெர்லைட் காட்சிகள், அரவிந்த்சாமி பேருந்தில் இருந்து இறங்கி பிரார்த்தனை செய்யும் காட்சிகள் ஆகியவை ட்ரிம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரிம் செய்யப்பட்ட புதிய வடிவிலான 'மெய்யழகன்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.