சபாநாயகர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது..?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியாகவே சபாநாயகர் பதவி இருந்து வருகிறது. சபாநாயகராக பதவியேற்பவருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தின் 16 சட்டசபை சபாநாயகராக திமுக-வின் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள்:
1.ஆளும்கட்சி தமிழகத்தை ஆளும் 5 வருடங்களில், சட்டசபை கூட்டங்களுக்கு தலைமை வகிப்பவர் தான் சபாநாயகர் தான்.
2.அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கருத்துக்களை அவை குறிப்பில் கூறும் போது, அவற்றை பதிவிட மற்றும் நீக்க இவருக்கு அதிகாரம் உண்டு.
3.சட்டசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒவ்வொரு துறை சார்ந்தும், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பும்போது, அவர்களை பதில் கூற சபாநாயகர் அழைப்பார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் முறைகேடாகவோ, சர்ச்சைக்குரிய வகையிலோ நடந்து கொண்டால், அவர்களை கூட்டத்திலிருந்து முழுவதுமாக நீக்கவோ, தற்காலிகமாக நீக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.
4. ஆளும்கட்சி சார்ந்தவராக சபாநாயகர் இருந்தாலும், பதவிக்காலம் முடியும்வரை அவர் கட்சி குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இவர் கட்சி சார்பற்றவராகவே கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும்.
5. சட்டசபை வளாகம் முழுவதும், அவைத்தலைவரான சபாநாயகரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும். எம்எல்ஏ-க்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டாலோ, தனி குழுவாக பிரிந்து வாதம் செய்தாலோ அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இவருக்கு உள்ளது.
6. சட்டசபை உறுப்பினர்கள், சட்டமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்துகொண்டால், அவர்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. அவர் பதிலளிக்கவில்லை எனில், சரியான நடவடிக்கையை இவர் எடுக்கலாம்.
7. சபாநாயகரின் எடுக்கும் முடிவுகள் மற்றும் உரிமைகளில் நீதிமன்றம் தலையிடாது.
8. எதிர்பாராத விதமாக எம்எல்ஏ-க்கள் பதவியிலிருந்து விலகினாலோ, தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, திடீர் மரணம் அடைந்தாலோ, சபாநாயகர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
9. சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என 80-களில் பிரகனப்படுத்தியவர், அப்போது சபாநாயகராக இருந்த பி எச் பாண்டியன் ஆவார்.
10. சட்டமன்றத்தில் மசோதாவிற்காக வாக்கெடுப்பு நடந்தால், ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் வாக்கு எண்ணிக்கை சமமாக இருந்தால், சபாநாயகர் வாக்களிக்க உரிமை உண்டு. ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என உத்தரவிட்டால், அதை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout