கமல் கூறும் கட்டிப்பிடி வைத்தியம்....! இதில் உள்ள சுவாரஸ்யமான நன்மைகள் என்னென்ன...?
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பது என்பது ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டுமே சார்ந்தது அல்ல, அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதங்களிலும் அமையலாம். கட்டிப்பிடித்தல் மன இறுக்கத்தை குறைக்கும் என்பது, இங்கு பலருக்கும் தெரிந்திருக்காது. இதைத்தான் நடிகர் கமல்ஹாசன் "வசூல்ராஜா-எம்பிபிஎஸ்" படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என கூறியிருப்பார்.
இதை பலரும் தவறான நோக்கில் புரிந்து கொள்கிறார்கள், இந்த கட்டிப்பிடித்தல் வைத்தியம் வெளிநாடுகளில் இயல்பான நடைமுறைகளில் ஒன்றாகவே உள்ளது. "free hugs" என்ற பெயரில், பலரும் போர்டுகள் வைத்துக்கொண்டு நிற்கும் பல வீடியோக்களை நாமும் பாத்திருப்போம். காமமோ, அன்போ அவரின் அனுமதியுடன், அன்போடு தழுவுதல், கட்டிப்பிடித்தல் தவறானது அல்ல. சரி இந்த கட்டிப்பிடி வைத்தியத்தில் சுவாரஸ்யமான நன்மைகள் குறித்து இதில் பார்க்கலாம்.
கட்டிப்பிடித்தல்:
மந்தமான மனநிலையிலும், சோகமாக இருப்பவரையும் கட்டிப்பிடிக்கும் போது, அவருக்கு உற்சாகம் கிடைக்கின்றது. இந்நிகழ்வு கவலையில் இருந்து நம்மை மீண்டெழ வைக்கின்றது. குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் வராமல் இருக்க, கட்டிப்பிடித்தல் பெருமளவில் உதவி புரிகின்றது.
இதய ஆரோக்கியம்:
கட்டிப்பிடி வைத்தியம் இதயத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. நாம் மற்றவரை கட்டிப்பிடிக்கும்போது இதயம் இதமாக உணர்வது மட்டுமில்லாமல், அதில் உள்ள தசைகள் வலுவடைகிறது.
பயம் நீங்கும்:
நாம் பிறரை கட்டிப்பிடிக்கையில், இருவருக்கும் இடையிலான பய உணர்வு குறையும். கட்டிப்பிடித்தலால் தயக்கம் மற்றும் இறப்பைப் பற்றியான அச்ச உணர்வு குறையும்.
ரத்தக்கொதிப்பு குறையும்:
கட்டிப்பிடிக்கும்போது பிறருக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால் அது கட்டுக்குள் வந்துவிடும். ஒருவேளை உங்களுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், ரத்தக்கொதிப்பு வரும்போது, அருகில் உள்ளவரை கட்டிக்கொண்டால், அது சமநிலைக்கு வரும்.
மன அழுத்தம் குறையும்:
ஒருவர் மற்றொருவரை கட்டிப்பிடிக்கும் போது, மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனது இலகுவாகிறது. இதனால் நீங்கள் மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள முடியும். காதலர்களுக்கு இடையில் சண்டை வந்தால், திடீரென ஒருவர் கட்டிப்பிடித்தால், எதிரில் உள்ள துணை அப்போதே அமைதியாகிவிடுவார். இதில் காதல் மற்றும் காம உணர்வுகள் அடங்குகிறது.
மகிழ்ச்சி உண்டாகும்:
கட்டிப்பிடித்தலின் போது நம் மூளையில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுகிறது. இதனால் நம் மனநிலை வலுவடைக்கின்றது. கட்டிப்பிடித்தல் நம் மனதிற்கு தெம்பளிப்பது மட்டுமில்லாமல், நம்மை தனிமையிலிருந்து விடுபட வைக்கின்றது. இதன் மூலம் ஆக்ஸிடாஸின் அதிகரித்து, நமக்கு தனிமை உணர்வு நீங்கும்.
ஒருவரை, ஒருவர் கட்டிப்பிடிக்கும்போதும், அவர்களுக்கு செரோடோனின் அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சியான உணர்வு அவர்களுக்கு கிடைக்கிறது.நாம் கவலையாக இருக்கையில், நமக்கு விருப்பமானவரையோ, நமது செல்லப்பிராணிகளையோ கட்டிப்பிடித்தால், நம் மனது லேசாகி விடும், அமைதியான சூழல் உண்டாகும்.
உடல்வலி குறையும்:
கட்டிப்பிடி வைத்தியத்தில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், கட்டிப்பிடிக்கும்போது தசைகள் இலகுவாகி, உடலில் உள்ள வலிகள் குறைகின்றது. இது ரணமான உடலை ரம்யமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
நம்முடைய நரம்பு மண்டலத்தையும் சமமாக வைத்துக்கொள்ள இது பயன்படுகிறது.
கட்டிப்பிடித்தல் மூலம் நம் அன்புக்குரியவர் மேல், நமக்கு அன்பும் அக்கறையும் ஏற்படும். இதன் மூலம் மூளை நன்கு செயல்படுவதால், நோய்களுக்கு எதிராகவும் இந்த வைத்தியம் போராட உதவுகிறது. ஒருவர், மற்றவரை கட்டிப்பிடிக்கும் போது நம்பிக்கை மற்றும் அவர்களின் மீது நல்ல மரியாதை உருவாகின்றது, இது சுயமரியாதையையும் ஒருவருக்கு உண்டாக்குகிறது.
இந்தகட்டிப்பிடி வைத்தியத்தை நீங்களும் உங்கள் காதலன், காதலியுடனோ, அன்புக்குரியவர்களுடனோ, உறவுகளுடனோ பரிமாறிக்கொண்டால், உடலையும், மனதையும் மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் சில குறும்புக்காரர்கள் தெரியாத நபர்களுடன் இதை முயற்சித்து, அடிவாங்காமல் இருந்தால் சரி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments