திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!
- IndiaGlitz, [Tuesday,November 03 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் திரையரங்கில் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
1. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குளை திறக்க அனுமதில்லை
2. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
3. திரையரங்கு வளாகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்.
4. திரையரங்கு மற்றும் அதன் வெளிப்பகுதியில் நிற்கும் பார்வையாளர்கள் சமூக இடைவெளி 6 அடியாக இருக்க வேண்டும்.
5. திரையரங்கினுள் குளிர்சாதன வசதி இருந்தால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரியாக இருக்க வேண்டும்
மேற்கண்ட வழிமுறைகளை கட்டாயம் திரையரங்குகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள் திரையரங்க நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது