திடீர் டிவிஸ்ட் அடித்த ரன் ரேட்டிங்… இந்தியா அரை இறுதிக்குள் நுழையுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் “பி“ டீமில் உள்ள இந்திய அணி இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணியுடன் மோதி படு மோசமாக தோல்வியடைந்திருக்கிறது. மேலும் ஆக்பானிஸ்தான், ஸ்காட்லாந்து என இரு அணிகளுடன் மோதி வெற்றிப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் ஸ்காட்லாந்து அணியுடன் திறமையாக விளையாடிய இந்திய அணி தற்போது தனது ரன் ரேட்டிங்கை உயர்த்தி இருக்கிறது. இந்தியா 1.619, ஆப்கானிஸ்தான் 1.481, நியூசிலாந்து 1.277 என தனது ரன் ரேட்டிங்கை வைத்துள்ளன. இந்நிலையில் இந்தியா நமீபியாவுடன் நடைபெறும் போட்டியில் மீண்டும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றிப்பெற்றால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றுவிடும் என சில ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த வாய்ப்பு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே நடக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. நியூசிலாந்து வரும் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியின் முடிவை பொறுத்தே இந்தியாவின் தலையெழுத்தும் அடங்கியிருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் நியூசிலாந்து அணி போட்டிகளை தொடர்ந்து கவனிக்கத் துவங்கிவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments