அஜித்தை இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன்: போனிகபூர்

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ரஷ் காப்பியை சமீபத்தில் பார்த்த போனிகபூர், தல அஜித்தின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''நேர் கொண்ட பார்வை ரஷ் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு? விரைவில் அஜித்தை நான் இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன். அவரிடம் மூன்று கதைகளை கூறியுள்ளேன். அவற்றில் ஒன்றிலாவது அவர் நடிப்பார் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

எனவே போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் விரைவில் ஒரு இந்தி படத்தின் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலையில் அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் தர்பார்: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படமான 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.

திருமணம் செய்வதாக ஆணை ஏமாற்றிய ஆண்: மேட்ரிமோனியல் நூதன மோசடி

சென்னை வடபழனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக பெண் தேடினார். இந்த நிலையில் ஒரு ஆன்லைன் மேட்ரிமோனியில் அவர் தனது பெயர்ரை பதிவு செய்துள்ளார். 

'தளபதி 63' படத்தில் இணைந்த மற்றொரு நாயகி!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.

ஷாருக்கான் - அட்லி சந்திப்பு! புதிய படத்தில் இணைவார்களா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று சென்னை அணியுடன் மோதும் போட்டியை நேரில் காண ஷாருக்கான சென்னைக்கு வந்திருந்தார்

சிஎஸ்கே போட்டியை மகன்களுடன் பார்க்க வந்த தனுஷ்!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.