அஜித்தை இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன்: போனிகபூர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் ரஷ் காப்பியை சமீபத்தில் பார்த்த போனிகபூர், தல அஜித்தின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''நேர் கொண்ட பார்வை ரஷ் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு? விரைவில் அஜித்தை நான் இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன். அவரிடம் மூன்று கதைகளை கூறியுள்ளேன். அவற்றில் ஒன்றிலாவது அவர் நடிப்பார் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
எனவே போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் விரைவில் ஒரு இந்தி படத்தின் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலையில் அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Saw the rushes of #NerkondaPaaravai. Happy... What a performance by Ajith.... I hope he agrees to do Hindi films soon. Have 3 action scripts, hope he says yes to atleast one of them. #NerkondaPaaravai #Ajithkumar
— Boney Kapoor (@BoneyKapoor) April 10, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com