என்ன ஒரு ஃபினிஷிங்: தல தோனிக்கு குவியும் பாராட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தோல்வி அடைந்த ஒரு அணியின் கேப்டனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுவது அனேகமாக உலகில் இதுதான் முதல்முறையாக இருக்கும். நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிராக தல தோனி ஆடிய ருத்ரதாண்டவத்தைத்தான் நாடே பாராட்டி கொண்டிருக்கின்றது
நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி கொடுத்த 162 என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன், டுபிளஸ்சிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஏமாற்றம் தந்தனர். ராயுடு, ஜாதவ் ஆகியோர் அடிக்க தொடங்கிய நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜடேஜாவும் ஒரு கட்டத்தில் ரன் அவுட் ஆனார். பிராவோ எதிர்பார்த்த வகையில் சோபிக்கவில்லை. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் அணியை தனி ஆளாக வெற்றியை நோக்கி கொண்டு சென்றார் தல தோனி
கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ரஸல் போன்ற பேட்ஸ்மேன்களால் முடியாத இந்த இலக்கை தோனி முழு நம்பிக்கையுடன் விளையாடி முதல் பந்தில் 4 ரன்கள், 2வது, 3வது பந்துகளில் சிக்ஸர்கள், 4வது பந்தில் 2 ரன்கள் மற்றும் 5வது பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்து, அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றுவிட்டார். விராத் கோஹ்லி உள்பட பெங்களூரு அணி வீரர்களின் முகத்தில் பயத்தை காட்டிய தல தோனி, கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் அவரால் ரன் எடுக்க முடியாததால் சிஎஸ்கே ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
இருப்பினும் தோனியின் அசாதாரணமான பேட்டிங் மற்றும் ஃபினிஷிங் குறித்துதான் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக உள்ளது. 37 வயது என்பது கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் வயதையும் தாண்டிய வயது. ஆனால் சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்த தல தோனி மீண்டும் ஒருமுறை நேற்று நிரூபித்தார். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் தல தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout