அந்தரத்தில் லேண்ட் ஆன மெட்ரோ ரயில்… வைரல் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

 

நெதர்லாந்து நாட்டில் மெட்ரோ ரயில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ரயிலை திமலங்கம் போன்று அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் வால் பகுதி தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் கீழே இருக்கும் தண்ணீரில் இந்த ரயில் விழுந்து முழுக வேண்டியதுதான். தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலை ஏற்படுத்தி இருக்கிறது.

நெதர்லாந்து நாட்டில் ரோட்ரடாம் மாகாணத்தில் பிஜ்ஹென்சி எனும் நகரப்பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலின் எல்லை டி அக்கர்ஸ் எனும் இடத்தோடு முடிவடைகிறது. மெட்ரோ ரயில் தனது சேவையை முடித்துக் கொண்டு தினமும் இந்த ரயில் நிலையத்தில்தான் நிற்கும். ஆனால் இந்த ரயில்வேயின் தண்டவாளம் ஒரு ஆற்று நிரோட்டத்தின் மேலே அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக சேவையை முடித்துக் கொண்டு டி அக்கர்ஸ் எனும் ரயில் நிலையத்திற்கு விரைந்த மெட்ரோ ரயில் டிரைவர், ஏதோ ஒரு வேகத்தில் ரயிலை வேகமாக இயக்கி இருக்கிறார். இதனால் சரியாக லேண்ட் ஆக வேண்டிய இடத்தில் ரயில் நிற்காமல், தன்னுடைய எல்லையைத் தாண்டி தண்டவாளத்தைத் விட்டு கீழே தொங்க ஆரம்பித்தது. அப்போதுதான் தண்டவாளத்தின் எல்லை பகுதியில் அமைக்கப்பட்ட சிற்பத்தின் மீது இந்த ரயில் மோதியது.

தண்டவாளத்தின் எல்லையில் அழகுக்காக கடந்த 2002 ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் 2 திமிங்கலத்தின் சிற்பத்தை தலைகீழாக வைத்தது. அந்தத் சிற்பத்தின் வால் பகுதி தற்போது ஒரு மெட்ரோ ரயிலை சேதமடையாமல் பாதுகாத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரயிலை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய மெட்ரோ ரயிலின் டிரைவர் சிறிய காயங்களோடு மீட்கப்பட்டு உள்ளார்.

More News

தளபதி விஜய் குறித்து அலிஷா அப்துலா: வைரலாகும் டுவிட்!

இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துலா நடிகர் அஜித்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதும் இருவரும் பைக் ரேசர்கள் என்பது மட்டுமின்றி அலிஷாவின் தந்தையும்

சுதா கொங்காராவால் லீக் ஆன சூர்யாவின் ரகசிய லுக்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

யாரு தோக்குறாங்களோ அவங்களுக்கு வின் பண்ணி கொடுக்குறதுதான் கெத்து: பாலாஜி

யார் தோல்வி அடைகின்றார்களோ, அவர்களுக்கு ஆதரவாக இருந்து வெற்றி பெற்றுக் கொடுப்பது தான் கெத்து என்று பாலாஜி இன்றைய இரண்டாவது புரமோவில் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகிறதா???

கொரோனா தொற்றை அடுத்து கடந்த 7 மாதங்களாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள்… 19 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

ஆப்கானிஸ்தானில் குவிந்து இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு படையை விலக்கி கொள்ளுமாறு கடந்த சில ஆண்டுகளாகவே கிளர்ச்சியாளர்கள் அங்கு கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.