சீனாவை திட்டியது போதும்... வுஹானுக்கு முன்பே கொரோனா வைரஸ் இந்த நாட்டிலும் இருந்தது: கொளுத்திப் போட்ட புதுத்தகவல்!!!
- IndiaGlitz, [Sunday,June 21 2020]
சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து மூலை முடுக்குகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் சூழ்ச்சிதான் இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் எனவும் சில நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலில் அறியப்பட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. இந்நிலையில் வுஹான் மாகாணத்திற்கு முன்பே இத்தாலியில் கொரோனா வைரஸ் இருந்தது என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
வுஹானுக்கு முன்பே வடக்கு இத்தாலியில் உள்ள மிலன் மற்றும் தூரின் நகரத்தின் சாக்கடை நீரில் கொரோனா வைரஸ் இருந்தது என்பதற்கான ஆதாரம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அந்நாடின் தேசிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் ஒருவேளை வுஹான் நகரத்துக்கு முன்பே கொரோனா வைரஸ் இத்தாலியைத் தாக்கி இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். காரணம் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பிரான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். சரியாக இத்தாலியில் புதிய கொரோனா வைரஸ் தாக்கியதாகக் கூறப்பட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அங்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் மிலன் நகரில் கடந்த அக்டோபர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலும் கிட்டத்தட்ட 40 இடங்களில் கழிவு நீரை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அதில் மிலன் நகர சாக்கடை நீரில் சார்ஸ் கோவிட் வைரஸ் இருப்பதற்கான அறிகுறி இருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுகுறித்து முழுமையான ஆய்வுத் தகவல் இன்னும் வெளியாக வில்லை. அடுத்த வாரத்தில் இந்த ஆய்வு வெளியிடப்படும் எனவும் எதிர்பாக்கப் படுகிறது.