'கபாலி' கேரக்டரில் கிறிஸ் கெய்ல் நடிக்கும் தமிழ்ப்படம்: டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் ஏற்கனவே மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் பிராவோ உள்பட ஒருசில கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மற்றொரு மேற்கிந்திய கிரிக்கெட் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் நடிக்கும் தமிழ் படம் ஒன்றின் டைட்டில் வெளியாகியுள்ளது.
கபாலி என்ற கேரக்டரில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ் கெய்ல் நடிக்கும் படத்தின் டைட்டில் ’ஹிட் விக்கெட்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் இணையதளங்களில் அவை வைரலாகி வருகின்றன
கிரிக்கெட் விளையாட்டின் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் ரவி, நந்தினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலாஜி என்பவர் இயக்கியுள்ளார். மாண்டே ஒளிப்பதிவில் அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Introducing your very own Ravi , Nandini , and Chris Gayle ♥️.
— A. JOHN- PRO (@johnmediamanagr) October 29, 2022
Music Director #AchuRajamani in #JoblessJalebi presents #HitWicket @AnanthNag24@Priyalaya_ubd @KabaleeswaranG @mandee1329@Armstrongprave1@ArunRaj6109@vijay56072903 @vmpprakash1@johnmediamanagr pic.twitter.com/YztQ2EwdLD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com