ஒரு ஐபோனுக்காக கைக் குழந்தையை விற்ற பலே தம்பதி? வசமாக சிக்கிய சம்பவம்

  • IndiaGlitz, [Saturday,July 29 2023]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் வசித்துவரும் தம்பதி இருவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வரும் நிலையில் அவர்கள் ஐபோனை வாங்குவதற்காக தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

24 பர்கானாஸ் மாவட்டத்தை அடுத்த பராக்பூர் பகுதியில் வசித்துவரும் தம்பதிகள் ஜெய்தேவ் கோஷ் – சதி. இவர்களுக்கு ஏற்கனவே 7 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்தக் குழந்தையை விட்டுவிட்டு அடிக்கடி ரீல்ஸ் வெளியிடுவதற்காக தம்பதிகள் இருவரும் சுற்றுலா சென்றுவருவதும் உற்சாகமாக குழந்தை இன்றி வெளியே சென்றுவருவதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சதியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வரும் நிலையில் தரமான வீடியோவை வெளியிடுவதற்காக ஐபோன் ஒன்றை வாங்க நினைத்ததாகவும் அதற்குப் பணமில்லாமல் குழந்தையை பிரியங்கா கோஷ் என்பவருக்கு விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை விற்ற பணத்தில் இருந்து புதிய ஐபோன் 14 செல்போனை ரூ.70 ஆயிரத்திற்கு வாங்கியிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த போலீஸார் சதி மற்றும் பிரியங்கா கோஷை கைது செய்துள்ளனர். ஆனால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் ஜெய்தேஷ் தப்பிச் சென்றுள்ளார். மேலும் குழந்தையைப் பற்றி பிரியங்கா கோஷ் எதுவும் கூறாததால் அந்த குழந்தை எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டது? இப்போது எங்கே இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து குழந்தையையும் அதை விற்பதற்கு ஏற்பாடு செய்த ஜெய்தேஷ் கோஷையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு ஐபோன் வாங்குவதற்காக பெற்ற ஆண் குழந்தையை விற்ற தம்பதிகள் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் அந்தத் தம்பதிகள் ஏற்கனவே தங்களுடைய 7 வயது சிறுமியை விற்க முயன்றதாக அந்த ஊர் தாசில்தார் தெரிவித்து இருப்பது மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

More News

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் பான் இந்திய திரைப்படம்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட் இணையும்  மட்கா என பெயரிடப்பட்டுள்ள ,பான் இந்தியா திரைப்படம் பூஜை விழாவுடன்,  பிரமாண்டமாக துவங்கியது

பணத்தை திருடிய நபர் தெரிந்தும் மனிதாபிமானமாக நடந்து கொண்ட கமல்-ரஜினி பட நடிகை..!

தன்னுடைய வீட்டில் பணம் திருடு போனதை அடுத்து அந்த திருட்டை செய்வது யார் என்பதை கண்டுபிடித்த பின்னரும் மனிதாபிமானமாக காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கமல், ரஜினி

நயன்தாரா இஷ்டமில்லை என்று சொல்லும்போது அவரை கட்டாயப்படுத்த முடியாது: விஷால்

நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தின் புரமோஷனுக்கு வர இஷ்டமில்லை என்று கூறினால் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நடிகர் விஷால் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். 

'ஜெயிலர்' படத்தில் தமன்னா கேரக்டர் இதுவா? அதனால் தான் 'காவாலா' பாடலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்  இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த உலகம் உழைக்கிறவன மட்டும் தான் நம்பும்: விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு பட டீசர்..!

யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த 'லக்கி மேன்' என்ற படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்