மதுவை டோர் டெலிவரி செய்ய அரசு முடிவு: அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,April 08 2020]
கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை டோர் டெலிவரி செய்ய ஒரு சில மாநில அரசுகள் ஏற்பாடு செய்து உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்களை டேர் டெலிவரி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 மணி முதல் 5 மணி வரை வீடு தேடி சென்று மது விநியோகிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுவுக்கு அடிமையானவர்கள் மாற்று வழியை தேடியும், தற்கொலைக்கு முயன்றும் வருவதால் இதனை தவிர்ப்பதற்காக மதுவகைகள் வீடு தேடி வரும் என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மேற்கு வங்க அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.