ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,June 24 2020]
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்களை பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா உச்சக்கட்டத்தை எட்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக ஐந்து கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் இருந்த நிலையில் தற்போது வரும் 30ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் கூடிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பாலாஜி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை முந்திக்கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடஙகை நீட்டித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை அடுத்து தமிழகம் உள்பட இன்னும் ஒரு சில மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.