காவல்துறை அதிகாரிகளை அடுத்து கொரோனாவுக்கு பலியான பெண் உதவி வட்டாட்சியர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர்களில் சிலர் உயிரிழந்து வரும் அதிர்ச்சி செய்திகளை பார்த்தோம். இன்றும் சென்னையை சேர்ந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி என்பவர் கொரோனாவுக்கு பலியானார். இந்த நிலையில் தற்போது பெண் உதவி வட்டாட்சியர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பலரது பாராட்டையும் பெற்ற மேற்கு வங்க துணை ஆட்சியர் தேவதத்தா ராய் கொரொனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்ளி என்ற மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றிய 38 வயது தேவதத்தா ராய் என்பவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஹூக்ளிக்கு அழைத்து வந்து, முகாம்கள் அமைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று தேவதத்தா ராய் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த துணை வட்டாட்சியர் தேவதத்தா அவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments