திமுக, அதிமுக செய்யாததை செய்து காட்டிய சின்ன கிராமம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போது வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதும், வயல்களில் உள்ள பயிர்கள் அழிவதும், மழை நின்ற ஒருசில மாதங்களில் குடிதண்ணீருக்கு பக்கத்து மாநிலங்களை கையேந்தும் நிலையும் தொடர்கதையாகி வருகின்றது.
மழை நீரை சேமித்து ஏரி, குளங்களில் சேர்க்க வடிகால் அமைக்கவும், ஏரி குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆளும் அதிமுக, திமுக இந்த கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. எனவேதான் தமிழகம் மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிப்பதும், கோடை காலங்களில் தண்ணீருக்காக கையேந்துவதுமாக உள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை என்ற கிராம மக்கள் அரசை எதிர்பார்க்காமல் அவர்களே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆறு, குளங்களை தூர் வாரியும் உள்ளனர். சுமார் 2500 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் ஊருக்குள் தண்ணீர் செல்லும் வழியை ஒழுங்குபடுத்தியது மட்டுமின்றி வயல்களில் உள்ள பயிர்கள் மூழ்காமல் இருக்க பாசன வடிகால் வாய்க்கால்களையும் அமைத்துள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் கிராமத்தில் தண்ணீர் தேங்காமல் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு செல்கின்றது. இதனால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுவதில்லை.,
இந்த கிராமத்தை ஒரு முன்னுதராணமாக எடுத்து கொண்டு தமிழகத்தில் உள்ள மற்ற கிராமங்களும் செயல்பட்டால் தமிழகத்தில் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout