படப்பிடிப்பில் காயமடைந்த ஸ்ருதிஹாசன் நாயகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் திரையுலக கலைஞர்களுக்கு இது ஒரு இக்கட்டான காலம் போல தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 'பிகே' இயக்குனர் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாமுக்கு படப்பிடிப்பின்போது தலையில் பலத்த காயம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் ஜான் ஆபிரஹாம் தற்போது வெல்கம் பேக்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றபோது, காட்சிப்படி ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் ஜான் ஆபிரஹாமின் தோளில் அடிப்பதற்கு பதிலாக தலையில் மாற்றி அடித்துவிட்டார். இதனால் ஜான் ஆபிரஹாம் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜான் ஆபிரஹாமின் தலையின் உள்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், ஒருசில நாட்கள் சிகிச்சை பெற்றால் குணமாகும் அளவுக்கு சிறிய காயம்தான் ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜான் ஆபிரஹாம் நடித்து வரும் 'வெல்கம் பேக்' படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நானா படேகர், அனில் கபூர், நஸ்ருதீன்ஷா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அனிஸ் பாஸ்மி என்பவர் இயக்கி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments