காமன்வெல்த் போட்டி: பதக்கப்பட்டியலை தொடங்கியது இந்தியா
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்கோஸ்ட் நகரில் கண்ணைக்கவரும் வண்ண நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால், சுஷில் குமார், மேரிகோம், ககன் நரங் உள்ளிட்ட 227 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டைய தொடங்கி வைத்தார்.
இன்றும் சில இந்தியாவின் முன்னணி வீரர்களுக்கான போட்டி நடைபெறவுள்ளதால் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout