சிம்பிளா 10 கிலோ weight loss… அஜித் பட நடிகையின் அட்டகாசமான டிப்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில் வெளியான “அசல்“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி. திருமணத்திற்கு பிறகு 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் இவர் 40 வயதிலும் படு ஃபிட்டான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகையான நடிகை சமீரா ரெட்டி தமிழில் “வாரணம் ஆயிரம்“, “வெடி“, “வேட்டை“, அஜித்துடன் “அசல்“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனி வரவேற்பை பெற்றிருந்தார். தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப்பல மொழிகளில் கவனம் செலுத்திவந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது ஹான்ஸ், நைரா என்று இரு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகிய இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி, வொர்க் அவுட், குழந்தை வளர்ப்பு, உணவு பழக்கம் குறித்த எண்ணற்ற கருத்துகளை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டுவருகிறார். அந்த வகையில் தனது உடல்எடையை 10 கிலோ அளவிற்கு குறைத்த நடிகை சமீரா இது எப்படி சாத்தியமானது என்பது குறித்த டிப்ஸ்களை தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு வருடத்திற்கு முன்பு நான் எனது உடற்தகுதியை பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். அதனால் 92 கிலோவில் தற்போது 81 கிலோவாகக் குறைத்து இருக்கிறேன். இப்போதுகூட உயரத்திற்குத் தேவையான உடல்எடையைவிட அதிகமாகத்தான் இருக்கிறன். ஆனால் அதிக ஆற்றலுடன் சுறுசுறுப்பாக என்னால் இயங்க முடிகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? எனக் குறிப்பிட்டு சில வழிமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
1.உடல்எடை குறைப்பிற்கு முயற்சித்துவிட்டு அதில் இருந்து அடிக்கடி பின்வாங்குகிறேன். ஆனாலும் நான் உடனடியாக அந்தப் பாதைக்கு மீண்டும் திரும்பிவிட்டேன்.
2. அவ்வபோது உண்ணாவிரதமம் இருக்க கற்றுக்கொண்டதால் இரவு நேர சிற்றுண்டி பழக்கத்தை என்னால் எளிதாக விலக்க முடிந்தது.
3. உடல்எடை குறித்த எதிர்மறை எண்ணத்தில் இருந்து தற்போது நல்ல உடல்தகுதியுடன் மகிழ்ச்சியாக இருக்க நிறைய வேலைகளை செய்கிறேன். அதில் சாப்பாடு முக்கியமான அம்சம்.
4. வொர்க் அவுட்டை மட்டுமே நம்பாமல் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் இது உடற்பயிற்சியை விளையாட்டாகவே செய்ய உதவும் .
5. ஒவ்வொரு வாரமும் உங்கள் முன்னேற்றத்தை சரிபாக்க நண்பர்களை கூடவே வைத்துக்கொள்ளுங்கள்.
6.யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக உடல்எடையை குறைக்க முயற்சிக்காதீர்கள்.
7. சுய வெறுப்பு வேண்டாம். அத்தகைய மனஅழுத்தத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது.
இவ்வாறு நடிகை சமீரா தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் வொர்க் அவுட் விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்த வீடியோ, புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருவதால் ரசிகர்களும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நடிகை சமீரா கூறிய பரிந்துரைகள் மிக உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments