"We Love Muslims" என டெல்லி மசூதியில் எழுதிவைத்த இந்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
புது டெல்லி டவார்கா பகுதியில் உள்ள மசூதியில் தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆன பிறகு நேற்று அந்த பகுதியை சேர்ந்த இந்துக்கள் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டு மசூதியின் வாயிலில் தட்டி ஒன்று வைத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி டெல்லியில் நடந்த கலவரத்தில் அங்கிருந்த பல மசூதிகள் உடைக்கப்பட்டன. ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களோடு மசூதிகளை உடைக்கப்படுகின்றன என அப்போது சொல்லப்பட்டாலும் அதன்பிறகு டெல்லி காவல்துறையானது அந்த தகவலை மறுத்து டிவீட் போட்டது.
இந்நிலையில் நேற்று காலை மசூதியின் வாசலில் ஒரு தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில்" நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நீங்கள்தான் நாங்கள், இந்துக்கள் முஸ்லீம்களை நேசிக்கிறோம், இப்படிக்கு டவார்க்காவை சேர்ந்த இந்துக்கள்" என எழுதியிருந்தது.
இந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
Two weeks after Dwarka Mosque, New Delhi was pelted stones at, Locals put up posters of Love and Harmony❤???? pic.twitter.com/0Xvi4j1efl
— Swati Khanna (@mynameswatik) March 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com