மும்பை மாப்பிள்ளைக்கும் டெல்லி பெண்ணிற்கும் வீடியோ காணொலி மூலம் நடைபெற்ற திருமணம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பையைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் டெல்லியைச் சேர்ந்த நீத் கவுர் என்பவருக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை விமர்சையாக நடத்த முடியவில்லை. மேலும், இவர்களது உறவினர்கள் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதால் அவர்களால் இந்தத் திருமணத்திற்கு வருகைத் தர முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வீடியோ மூலம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இவர்களின் முடிவிற்கு பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் உடன்பட ஏப்ரல் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்காக மும்பையில் மாப்பிள்ளை அலங்காரக் கோலத்துடன் லேப்டாப் முன்னர் அமர்ந்திருந்தார். டெல்லியில் மணப்பெண்ணும் அலங்காரத்துடன் அமர்ந்திருக்க, உலகம் முழுக்க இருந்த உறவினர்களுடன் இவர்களுடன் இணைந்து கொண்டனர். மாப்பிள்ளை தாலி காட்டுவது போன்று பாவனை செய்ய அதை மணப்பெண் ஏற்றுக்கொண்டார். உறவினர்கள் தாங்கள் இருந்த இடங்களிலேயே மலர் தூவி வாழ்த்தவும் செய்தனர். இந்த நிகழ்வுக்குப்பின்னர் உறவினர்கள் உட்பட அனைவரும் நடனம் ஆடி தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர். இத்திருமணம் வீடியோ கான்ப்ரசில் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றிருக்கிறது.
பல லட்சக்கணக்கில் செலவு செய்து விமர்சையாக, ஆடம்பரங்களுக்கு மத்தியல் நடைபெறும் திருமணங்களுக்கு பதிலாக எளிமையாகத் திருமணங்களை நடத்த முடியும் என கொரோனா எடுத்துக் காட்டியிருக்கிறது. கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும் மனிதனுக்கு எது அத்யாவசியத் தேவை என்பதையும் இந்நேரத்தில் பல வழிமுறைகளில் எடுத்துக்காட்டி வருகிறது. வீடியோ மூலம் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் முறையாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout