இ-பதிவு முறையில் திருமண நிகழ்வு சேர்க்கப்பட்டது...! ஆனால் புதிய நிபந்தனைகளுடன்...?

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

திருமணத்திற்கு இ-பதிவு முறையை பயன்படுத்துவதில் புதிய நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ- பதிவில் திருமணத்திற்காக பதிவிடுபவர்களுக்கு, பத்திரிக்கையில் இருக்கும் அனைவரின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பத்திரிக்கையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-சான்றிதழ் பெறமுடியும்.

திருமணத்திற்கான இ-பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக மணமகள், மணமகன், தாய், தந்தை உள்ளிட்டோர் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். ஒருவரின் திருமண நிகழ்விற்கு, ஒரு இ-பதிவு சான்றிதழ் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

அந்த இ-பதிவில் பத்திரிக்கையில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். திருமணத்தில் பயன்படுத்தக்கூடிய வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். அதேபோல் வாகனங்களில் பயணம் செய்யக்கூடிய நபர்களின் பெயரையும், அவர்களின் அடையாள அட்டையையும் பதிவிட வேண்டும். முக்கியமாக பொய்யாக பத்திரிக்கை தயாரித்து பதிவிட்டு இருந்தால், நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.