ஆர்யா திருமண தேதி: மணப்பெண் விபரத்துடன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களான விஷால், ஆர்யா திருமணங்கள் விரைவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விஷாலின் திருமணம் குறித்தும் அவரது எதிர்கால மனைவி குறித்தும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ஆர்யாவின் திருமணம் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது. ஆர்யாவுக்கும் அவர் நடித்த 'கஜினிகாந்த்' படத்தின் நாயகியான சாயிஷாவுக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் கலந்து பேசிவிட்டதாகவும் வரும் மார்ச் 9,10 ஆகிய தேதிகளில் ஆர்யா-சாயிஷா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தை அடுத்து சென்னையில் மிகச்சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அதில் தமிழ்த்திரையுலகை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.