வீட்டிற்குள்ளும் முகக்கவசம் அணியும் நேரம் வந்துவிட்டது… கதறும் சுகாதாரத்துறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் அதிகரித்து விட்ட நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசியுள்ளார். அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருக்கும்போது அவரிடம் இருந்து 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவிவிடுகிறது என்றும் அவர் அச்சம் தெரிவித்து உள்ளார். இதனால் சமூக இடைவெளி என்பது அவசியமான ஒன்றும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 350 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. நேற்றுமுன்தினம் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை தாண்டிய நிலையில் நேற்று சற்று தணிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய உயிரிழப்பு 2,771 என கணக்கிடப்பட்டு உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்து உள்ளார். மேலும் மக்கள் அச்சத்தால் மருத்துவமனை படுக்கைகளை ஆக்கிரமித்து இருக்கின்றனர். மருத்துவர்களின் ஆலோசனையின்படியே மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்பட வேண்டும். போதிய மருத்துவ ஆக்சிஜன் இருக்கிறது.
மேலும் ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதிலேயே தற்போது சவால் ஏற்பட்டு உள்ளது. சமூக இடைவெளி பின்பற்றப்படாவிட்டால் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு நோய்த்தொற்று பரவுகிறது. சமூக இடைவெளி 50% பின்பற்றப்பட்டால் ஒரு நபரிடமிருந்து வெறும் 15 பேருக்கு மட்டுமே தொற்று பரவும் 75% சமூக இடைவெளி பின்பற்றப்பட்டால் ஒரு நபரிடமிருந்து 2.5% பேருக்கு மட்டுமே தொற்று பரவும் என விளக்கம் அளித்து உள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என லாவ் அகர்வால் தெரிவித்து இருப்பது தற்போது பலரையும் சிந்திக்க வைத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments