ரஜினி, அஜித், விஜய்யை நேரில் சந்திக்க உள்ளோம்: ஆர்.கே.செல்வமணி பேட்டி!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

கொரோனா பேரிடர் காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த ரஜினி, அஜித், விஜய் உள்பட அனைத்து சினிமா பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் தெரிவித்துள்ளார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியானது. இதனை அடுத்து திரையுலகினர் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்தனர்

குறிப்பாக ரஜினிகாந்த் 50 லட்சம், ராகவா லாரன்ஸ் 50 லட்சம், விஜய் 25 லட்சம், அஜித் 25 லட்சம், நயன்தாரா 20 லட்சம், தனுஷ் 15 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், சிவகுமார் குடும்பம் 90 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், உதயநிதி 10 லட்சம், விஜய்சேதுபதி 10 லட்சம் என லட்சக்கணக்கில் திரையுலக பிரபலங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இது குறித்து தற்போது பேட்டி அளித்த பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் ’கொரோனா காலத்தில் திரையுலகைச் சார்ந்தவர்கள் சுமார் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி உதவி அளித்துள்ளனர். இவர்கள் அனைவரிடமும் பெப்சி அமைப்பின் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்

More News

ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகை!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அசுரன்'. இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து இருந்த நடிகை

விவசாயிகள் பிரச்சனை: கருத்து சுதந்திரம் குறித்து விராத் கோஹ்லியின் கருத்து!

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத திரைஉலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாப் பாடகி ரிஹானாவின்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சி நாடகமாடுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் உரை நிகழ்த்தினார்.

அதிர்ஷ்டக்காத்து என்றால் இதுதானா? கொடுத்தது 7 லட்சம் ஆனால் கிடைச்சது 2 கோடி?

பழங்கால நாணயத்தின் மீது ஆர்வம் உள்ள ஒரு நபர் கனடாவில் ஒரு பழைய பண்ணை வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

ஒரு பிளேட் பிரியாணி ரூ.4 லட்சமா?  

சாதாரண பிரியாணி என்றாலே சிலிர்த்துப் நாம் போய் விடுகிறோம். காரணம் அந்த உணவிற்கு மட்டும் அப்படியொரு தனி ருசி.