பணிக்கு திரும்புவோம், ஆனால் பயணிகளிடம் காசு வாங்க மாட்டோம்: போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். குறிப்பாக அலுவலகங்கள் சென்று வருபவர்கள், மாணவர்கள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்றும், போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. நீதிமன்றமும் போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

இந்த நிலையில் தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்றும் அப்படியே கட்டாயப்படுத்தி பணிக்கு அனுப்பினால் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு பணம் வசூலிக்க மாட்டோம்' என்றும் போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அரசு செய்வதறியாது திகைத்துள்ளதாக கூறப்படுகிறது

More News

ரஜினியின் முதல் அரசியல் மாநாடு குறித்த தகவல்

ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அறிவித்தார்.

தோனி சாதனையை முறியடித்த இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கடந்த 5ஆம் தேதி கேப்டவுன் நகரில் தொடங்கிய

தல அஜித்துக்காக வித்தியாசமான கேரக்டர் வைத்திருக்கும் மோகன்ராஜா

சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பணிபுரியும் தற்காலிக கண்டக்டர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கண்டக்டராக பணிபுரியும்போது அவருடைய ஸ்டைலை பார்த்து தான் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

சச்சின் மகளை கடத்துவதாக மிரட்டிய வாலிபர் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகளை கடத்துவதாக அவரது தொலைபேசிக்கு மிரட்டல் விடுத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.