அடுத்த ஐபிஎல்-இல் தல தோனி இருப்பாரா? சிஎஸ்கே நிர்வாகம் சொல்வது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
“அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சென்னை சிஎஸ்கே சார்பாக மகேந்திர சிங் தோனி தக்கவைத்துக் கொள்ளப்படுவார்“ என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக “சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் என்னுடைய கடைசி ஆட்டம்“ என்று தோனி அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகத்தின் சார்பில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பது தோனி ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தல தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பிறகு தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். அவர் சென்னை அணியில் விளையாடத் துவங்கியதில் இருந்தே தமிழக ரசிகர்கள், நடிகர் அஜித்துக்கு கொடுத்துவந்த அதே மரியாதையை தோனி அவர்களுக்கும் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
இப்படி பல கோடிக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஐபிஎல் போட்டியில் விளையாடிவரும் தல தோனி மீது சமீபகாலமாக பல்வேறு எதிர்மறை கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது தோனி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போலவே விளையாடுகிறார், பழைய ஃபார்ம் அவரிடம் இல்லை, கேப்டனாக மட்டுமே வலம் வருகிறார் என்று பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதனால் தோனி விரைவில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி விடுவாரோ? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி வந்தனர்.
இதையடுத்து சென்னை ரசிகர்களுக்கு முன்னால்தான் என்னுடைய கடைசி ஆட்டம் நிறைவுபெறும் என்று தோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனால் அடுத்த ஐபிஎல் போட்டியில் அவர் உறுதியாக விளையாடுவார் என்று ரசிகர்கள் பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை சிஎஸ்கே அணி நிர்வாகம் அதை உறுதிப்படுத்தும் விதமாக “அடுத்த ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி தக்கவைத்துக் கொள்ளப்படுவார்“ என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும் அடுத்த ஐபிஎல் போட்டியே அவருக்கு இறுதிப்போட்டியாக இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது என்று விளக்கமும் அளித்திருக்கிறது. இதனால் இன்னும் பல போட்டிகளில் தோனி கலந்து கொண்டு ஒன்றிரண்டு வெற்றிக் கோப்பைகளை சென்னை அணிக்கு பெற்றுத்தர வேண்டும் என்று ரசிகர்கள் அவரிடம் கோரிக்கை வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் 2021 போட்டிகளில் சிஎஸ்கே ஃபிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்றிருக்கும் நிலையில் ரசிகர்கள் வெற்றிக்கோப்பைக்காக காத்திருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments