விஷாலை மட்டும் தேர்தலில் எதிர்ப்போம்: பிரபல தயாரிப்பாளர்-நடிகர்!

நடிகர் சங்க தேர்தல் விரைவில் வரவுள்ளதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும் என்றும், இப்போதுள்ள நிர்வாகிகளே அந்தந்த பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார்கள் என்றும் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்திற்கு பின் சங்கத்தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் விஷால் போட்டியிட்டால், நாங்கள் அவரை எதிர்ப்போம் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலை தவிர கார்த்தி உள்பட யார் களம் இறங்கினாலும் அவர்களை ஆதரிப்போம் என்றும் விஷால் செயல்பாடு சரியில்லை என்றும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்ப்பை மீறி விஷால் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என நடிகர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன