கேளிக்கை வரி விவகாரம்: லைகா நிறுவனம் அதிரடி முடிவு
- IndiaGlitz, [Wednesday,July 05 2017]
கடந்த 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்தே தமிழ்த்திரையுலகம் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் 30% வரியும் கட்ட வேண்டிய நிலை திரையுலகினர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மூன்றாவது நாளாக திரையரங்குகள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் இன்று மாலைக்குள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றும் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் டிஜிட்டல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய ராஜூ மகாலிங்கம், 'கேளிக்கை வரி குறித்து சரியான முடிவு வரும்வரை திரைப்படம் தயாரிக்க மாட்டோம் என்று கூறினார்.