இவங்களுக்கு நாங்கள் விசா கொடுக்கவே மாட்டோம்: ஓர வஞ்சனை காட்டும் அமெரிக்கா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் அதிகாரிகள் யாருக்கும் அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப் படமாட்டாது என தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே H-1B, H-2B, J விசாக்களை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைத்திருக்கும் அமெரிக்கா தற்போது சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு மட்டும் விசா வழங்க மாட்டோம் என புது அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றனர்.
காரணம் சீனா, ஹாங்காங் விஷயத்தில் நடந்துகொள்ளும் வழிமுறைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் இப்படியான முடிவை எடுத்து இருக்கிறோம் என மைக் பாம்பியா விளக்கம் அளித்து இருக்கிறார். சீனாவின் பிடியில் ஹாங்காங் மாட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் ஹாங்காங்கின் பாதுகாப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் வண்ணம் புதிய சட்ட அமைப்பை கொண்டு வரவிருக்கின்றனர்.
ஹாங்காங்கின் பாதுகாப்பு சட்டத்திருத்ததிற்கு ஏற்கனவே சீன அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் நாளை கூட்டத் தொடரில் இதுகுறித்த விவாதம் எழுப்பப்பட உள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு ஹாங்காங்கின் பாதுகாப்பு கவுன்சில் விவகாரத்தை நாளை விவாதிக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதன் அர்த்தம் ஹாங்காங்கின் பாதுகாப்பு விஷயம் முழுக்க சீனாவின் அதிகாரத்திற்கு கீழ் இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை இப்புதிய சட்டம் உறுதிப் படுத்துகிறது. தேவைப்பட்டால் பாதுகாப்பு அமைப்பை மாற்றவும் சீனாவிற்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் இந்தப் புதியச் சட்டம் வலியுறுத்துகிறது.
ஹாங்காங் விவகாரத்தில் சீனா நடந்து கொள்ளும் வழிமுறை குறித்து தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் குரல் கொடுத்து வருகிறார். சீனாவின் அத்துமீறலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார். எனவே ஹாங்காங்கின் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு விசா வழங்காது என மைக் பாம்பியா விளக்கம் அளித்து இருக்கிறார். இதுகுறித்து இந்த முடிவு தவறானது என்ற கருத்தை சீனா வெளியிட்டு இருக்கிறது. மேலும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் சீனாவின் வெளயுறவு அமைச்சகமும் அமெரிக்காவின் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறது.
ஹாங்காங் பாதுகாப்பு சட்ட அமைப்பு குறித்த புதிய சட்டத்திருத்தத்தை சீனா அமல்படுத்தினால் ஹாங்காங்கின் சுயவுரிமைக்கு பங்கம் ஏற்படும் என அந்நாட்டு மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் இதற்கான போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக போராட்டங்கள் தடைப்பட்டு இருந்தன. இந்நிலையில் சீனாவின் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை கூடவிருக்கிறது. இதில் நிலைக்குழு கூடி புதிய பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டால் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும் எனவும் அச்சம் தெரிவிக்கப் பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com