கைலாசாவிலும் கொரோனாவா..! என்ன சொல்கிறார் நித்தியானந்தா..?!

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என காவல்துறை சொல்கிறது ஆனாலும் அவ்வப்போது வீடியோ டிவீட் என வெளியிட்டு இன்டர்போல் போலீசுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய உயர்நீதிமன்றம் பலமுறை சொல்லியும் காவல்துறையினரால் நித்தியனாந்தா எங்கு இருக்கிறார் என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

நித்தியானந்தா கைலாசா என்னும் தீவை வாங்கி அங்கு தன் சீடர்களுடன் வாழ்வதாகவும் அதை தனி நாடாக அறிவிக்க வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸானது கைலாசாவை மட்டும் விட்டு வைத்திருக்கிறதா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

இந்த கிண்டல்களுக்கு பதில் சொல்லும் விதமாகவும் தன்னை மறந்திருந்த மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் போடப்பட்டிருந்தது. அதில் கைலாசாவில் கொரோனா இல்லை. சிவா பெருமான் எங்களை காக்கிறார் என சொல்லப்பட்டிருந்தது. இது நித்தியானந்தாவின் உண்மையான டிவிட்டர் பக்கம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்த டிவீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

More News

கொரோனாவைத் தடுக்கலாம்.. வைரலாகும் தீக்குச்சி வீடியோ..!

ஜுவான் டெல்கான் என்பவர் வெளியிட்ட ஒரு சிறிய வீடியோவானது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தெளிவாக விளக்கும் விதமாக உள்ளது.

அதிபர் ட்ரம்ப்பை வைரஸ் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

கொரோனா அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 93 உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஆபாசமாக மிரட்டிய நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த அஜித், விஜய் பட நடிகை

அஜித் நடித்த பில்லா, விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான நடிகை நமீதாவை

ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவருக்கே கொரோனா! நடக்குமா ஒலிம்பிக்

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் இவ்வாண்டு ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி

பார்வையாளர் இல்லாமல் நடத்தப்படும் WWE போட்டி: ரசிகர்கள் அதிருப்தி

அமெரிக்காவில் நடைபெறும் WWE என்ற மல்யுத்தப் போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்வார்கள்