தேசம் தான் முக்கியம்; பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி குறித்து விராத் கோஹ்லி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதில் இருந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான இந்தியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட கூடாது என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைகள். இந்த தாக்குதலை நினைத்து இந்திய அணி அதிர்ச்சி அடைந்துள்ளது
எங்களின் நிலைப்பாடு மிக தெளிவானது: தேசத்துக்கு என்ன தேவையோ அதுதான் எங்களுக்கும் தேவை. பிசிசிஐ என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் எங்களின் முடிவும்
மத்திய அரசும், கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு செய்தாலும், நாங்கள் அதன்படிதான் நடப்போம், அந்த முடிவுக்குக் கட்டுப்படுவோம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இதுதான் எங்கள் நிலைப்பாடு' என்று விராத் கோஹ்லி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments