தேசம் தான் முக்கியம்; பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி குறித்து விராத் கோஹ்லி

  • IndiaGlitz, [Saturday,February 23 2019]

கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதில் இருந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான இந்தியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட கூடாது என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைகள். இந்த தாக்குதலை நினைத்து இந்திய அணி அதிர்ச்சி அடைந்துள்ளது

எங்களின் நிலைப்பாடு மிக தெளிவானது: தேசத்துக்கு என்ன தேவையோ அதுதான் எங்களுக்கும் தேவை. பிசிசிஐ என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் எங்களின் முடிவும்

மத்திய அரசும், கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு செய்தாலும், நாங்கள் அதன்படிதான் நடப்போம், அந்த முடிவுக்குக் கட்டுப்படுவோம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இதுதான் எங்கள் நிலைப்பாடு' என்று விராத் கோஹ்லி கூறினார்.

More News

179 நாடுகள், 10 ஆயிரம் விண்ணப்பங்கள்: சாதனை செய்த இந்திய நடிகை

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதுண்டு.

பெங்களூர் விமான கண்காட்சியில் மீண்டும் விபத்து: 150 கார்கள் எரிந்து சேதம்

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த கண்காட்சியின் பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால்

ஓட்டலில் சாப்பிட்டபின் குழந்தையை மறந்து வெளியே வந்த பிரபல நடிகை!

பொதுவாக ஓட்டலில் சாப்பிட சென்றவர்கள் பர்ஸ், செல்போன், ஹேண்ட்பேக் உள்பட ஒருசில பொருட்களை மறந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கமான ஒன்றே.

தல அஜித் டீம் வென்ற தங்க, வெள்ளி பதக்கங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்சா என்ற ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவிற்கு தல அஜித் ஆலோசகராக பணிபுரிந்தார் என்பதும்

ஒரு புரோஜனமும் இல்லை! 7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதி கருத்து

ராஜீவ் காந்தி கொலையாளிக்ள் 7 பேர் விடுதலை குறித்து என்னிடம் கேள்வி கேட்டு ஒரு புரோஜனமும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.