'காலா'வுக்கு எதிராக போராட்டம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் 'காலா' படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவு இல்லாததால் டெபாசிட் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் மேலும் கூறியபோது, ''குசேலன்' படத்தின்போது ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமே இருந்தார் என்பதால் வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு படத்தை அனுமதித்தோம். ஆனால் தற்போது அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதால் காவிரி பிரச்சனையில் அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 'காலா' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். மீறி திரையிட முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments