'காலா'வுக்கு எதிராக போராட்டம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் 'காலா' படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவு இல்லாததால் டெபாசிட் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் மேலும் கூறியபோது, ''குசேலன்' படத்தின்போது ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமே இருந்தார் என்பதால் வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு படத்தை அனுமதித்தோம். ஆனால் தற்போது அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதால் காவிரி பிரச்சனையில் அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 'காலா' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். மீறி திரையிட முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

More News

இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை' இந்த நிகழ்ச்சியை கலாய்த்து

யார் நீங்க? ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துகுடி இளைஞர்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும்

'காலா' படத்திற்கு தடை: கொந்தளித்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினியின் குரல் தமிழகத்திற்கு ஆதரவாக இருந்ததால் கன்னட அமைப்புகள்

போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பிரபலங்களின் ரியாக்சன்

தூத்துகுடியில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவதால் கலவரமாக வெடிக்கின்றது