விமான பயணத்துல கொரோனா வந்தா செலவை நாங்களே ஏத்துக்கிறோம்!!! அலற வைக்கும் புதுயுக்தி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளைக் கவருவதற்காகத் தற்போது ஒரு புது டெக்னிக்கை பயன்படுத்த இருக்கிறது. அதாவது எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்யும்போது ஒருவேளை கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுடைய மருத்துவச் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என கூறியிருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் ஒரு பயணிக்கு ரூ.1.3 கோடி வரையிலும் செலவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்போது வருமானத்தை இழந்து வருகின்றன. நிலைமையைச் சமாளிக்க பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செயலிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் பயணிகளைக் கவருவதற்காகத் தற்போது எமிரேட்ஸ் விமான நிறுவனம் கொரோனா பாதிப்பு ஏற்படும் நபருக்கு மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்த சலுகை வருகிற அக்டோபர் 31 வரை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை கொரோனா அறிகுறியால் தனிமைப் படுத்தப்பட்டால் அவர்களுக்கு 8,691 ரூபாய் வழங்கப்படும் என்பதும் கூடுதல் சலுகை. பயணம் செய்த நாளில் இருந்து அடுத்த 31 நாட்கள் வரையிலும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. பயணிகள் இதுதொடர்பாக நிறுவனத்துடன் தொடர்புக் கொள்வதற்கு என்று தனி தொலைத்தொடர்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout