எல்லா அமெரிக்க படைகளையும் உதைத்து வெளியே தள்ளுவோம்...! ஈரான் அதிபர்.
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க படைகள் அனைத்தும் இப்பிராந்தியத்திலிருந்து உதைத்து எறியப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரான் ராணுவ தளபதி சுலைமான் ஐஎஸ், அல் கய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக வீரமாக போராடியவர். அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால் ஐரோப்பிய தலைநகரங்கள் தற்போது ஆபத்தில் இருந்திருக்கும் .சுலைமானிம் படுகொலைக்கு நாங்கள் அளிக்கும் இறுதி பதில் அமெரிக்கா படைகள் அனைத்து இந்த பிராந்தியத்தில் உதைத்து ஏறியப்படும் என்பதே” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com