நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் விஜய்சேதுபதி: குஷ்பு டுவீட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் விஜய் சேதுபதி விலகி விட்டாலும் அது குறித்த செய்திகள் இன்னும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் தற்போது சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, ’விஜய் சேதுபதி உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
விஜய் சேதுபதி அவர்களே, நீங்கள் ஒரு வலிமையான நபர். நீங்கள் இப்போது இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் வந்திருப்பது காட்டுமிராண்டித்தனமானது. கண்டிப்பாக இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததைச் செய்ய ஒரு பெரிய மனசு வேண்டும். நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்’ என கூறியுள்ளார்.
Dear @VijaySethuOffl You are a strong person, stay as you are. Threat to your family members was barbaric and should be investigated. The culprit must be traced and punished severely. It takes a big heart to do what you have done. We stand with you in solidarity. Hugs and love ??
— KhushbuSundar ❤️ (@khushsundar) October 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout