அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியல் முக்கியம். விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் மரணத்திற்காக சென்னை லயோலா கல்லூரியில் 'அனிதா நினைவேந்தல்' கூட்டம் நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விஜய்சேதுபதி பேசியபோது 'அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியலை கற்று கொடுக்க வேண்டியது அவசியம்' என்று பேசினார். அவர் மேலும் கூறியதாவது:
'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம்.
போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை சுலபமா கலைச்சுடறாங்க. அதனால் இனி வரும் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக என்னவெல்லாம் செய்யலாம் என்பதை யோசிக்கலாம். அதே மாதிரி நம்ம தலைமுறையினருக்கு அரசியல் பற்றிய அறிவை நிறைய ஊட்டணும்னு ஆசைப்படுறேன். அடுத்த தலைமுறையினருக்கு சினிமாவை விட அரசியல் கற்றுத் தரணும். அதுதான் முக்கியம். சாதி மட்டும்தான் இந்தச் சமுதாயத்தைப் பிரிச்சு வைக்கிறது. நம்மைப் போராட தயங்க வைக்குதுனு நான் நினைக்கிறேன். அதை நாமதான் உடைச்சு எரியணும்''
இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

More News

இது இன்னொரு சுதந்திர போராட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஆவேசம்

மருத்துவ படிப்பின் கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் துயர முடிவு தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆத்திரம் கொள்ள வைத்த நிலையில் கமல்ஹாசன் போன்ற சமூக சிந்தனையுடன் மக்கள் மீது நல்ல அக்கறை கொண்டவர்களுக்கு இருமடங்கு ஆத்திரம் எழுந்துள்ளது...

தமிழக அரசின் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதாவின் சகோதரர்கள்

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் குழப்பங்களால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை.

'மெர்சல்' அமெரிக்கா ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் உலகின் சிறந்த மேஜிக்மேனாக வாய்ப்பு: பயிற்சியாளர் பெருமிதம்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் மேஜிக்மேன் கேரக்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருக்கு மேஜிக் பயிற்சி கொடுத்த பல்கேரியாவை சேர்ந்த டேனி பெலெவ் (Dani Belev) சமீபத்தில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்...

எடிட்டராக மாறிய பிரபல நடிகர்-இசையமைப்பாளர்

கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர் ஆவது, இயக்குனர் நடிகர் ஆவதும், நடிகர் இசையமைப்பாளர் ஆவதும், இசையமைப்பாளர் நடிகர் ஆவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள்...