முதல்வரை மாற்ற வேண்டும்: சி.ஆர்.சரஸ்வதி
- IndiaGlitz, [Wednesday,August 23 2017]
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வார்கள். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை.
இந்த நிலையில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் தினகரன் அணியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தினகரன் அணியின் பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியபோது, "தொண்டர்களிடம் உள்ள ஒற்றுமை தலைவர்களிடம் இல்லை. தொண்டர்களை போன்று தலைவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
முதலமைச்சர் என்பவர் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்; யாரையும் விலக்கி வைக்க கூடாது. கட்சி பிளவுபடக்கூடாது என்பதற்காக முதல்வரை மாற்றக்கோரி கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளோம். கவர்னரின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.