close
Choose your channels

வேற லெவல் சிவகார்த்திகேயனை 'வேலைக்காரனில்' பார்க்கலாம்: ஆர்.ஜே.பாலாஜி

Tuesday, December 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் முக்கிய கேரக்டரில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும், சிவகார்த்திகேயனின் கேரக்டர் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

சிவகார்த்திகேயனை இதுவரை ஆடியன்ஸ் ஒரு விளையாட்டு பையனாக, பொருப்பில்லாமல் சுற்றிக்கொண்டு ஜாலியாக திரியும் பையனாகத்தான் படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தான் அவருடைய படத்தில் திருப்புமுனை ஏற்படும். ஆனால் 'வேலைக்காரன்' படத்தில் ஆரம்பத்தில் இருந்தே சமூகத்தில் ஒரு பொருப்பை உணர்ந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார். அவரிடம் உள்ள அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதால் வேற லெவல் சிவகார்த்திகேயனை இந்த படத்தில் பார்க்கலாம்

மேலும் சிவகார்த்திகேயனை எனக்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பிருந்தே தெரியும். ஆனால் இந்த படம் எங்கள் இருவரின் நட்பை இன்னும் நெருக்கமாக்கியது. அவருடன் நடித்த நாட்களில் சின்னச்சின்ன விஷயங்களை கூட ஷேர் செய்து இன்று அவருடைய மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக உள்ளேன்' என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment